நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

மலையாளத்தில் 2018 படம் மூலம் பிரபலமானார் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப். இவரது இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வந்தது. இதனை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் சிம்புவின் 3 பட அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகின. இதில் இந்த கூட்டணியில் உருவாகும் படம் இடம்பெறவில்லை.
இந்த நிலையில் ஜூட் ஆண்டனி ஜோசப்பின் அடுத்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க போகிறதாம். இதில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்கின்றார். அவருக்கு வில்லன் கதாபாத்திரத்தில் இன்னொரு பிரபலமான நடிகரை நடிக்க வைக்க பேசி வருகின்றனர். அநேகமாக ஆர்யா நடிக்கலாம் என கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்கிறார்கள். சிம்புவிற்கு சொன்ன கதையில் தான் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கின்றார் என கூறப்படுகிறது.