பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

மறைந்த பிரபல பின்னனி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி. சரண். தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார். இது அல்லாமல் சரோஜா, துரோகி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சென்னை 28, மழை, ஆரண்ய காண்டம் ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.
தற்போது எஸ்.பி.பி.சரண் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். அரசியல் கதைகளத்தை பின்புலமாக கொண்டு உருவாகி வருகிறது. படமாக அல்லாமல் வெப் தொடராக தயாராகிறது. இதற்கு 'அதிகாரம்' என தலைப்பு வைத்துள்ளனர். இதில் அதுல்யா ரவி, அபிராமி, தேவ், அரவிந்த் ஆகாஷ், ஜான் விஜய் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்போது இந்த வெப்தொடர் இறுதிகட்டத்தில் உள்ளது.