'எல் 2 எம்புரான்' படத்தின் பட்ஜெட் இவ்வளவுதானா ? | அஜித், தனுஷ் கூட்டணியை உறுதி செய்த தயாரிப்பாளர்! | சல்மான்கான் சொன்ன கதைக்கு மறுப்பு தெரிவித்து ஏ.ஆர். முருகதாஸ்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தின் புதிய அப்டேட்! | பாவனாவின் வருஷம் 14! | முதல் பாகத்தில் இறந்தேன்.. 2ம் பாகத்தில் நடித்துள்ளேன் ; எம்புரான் நடிகர் வைக்கும் டுவிஸ்ட் | 15 கோடி கேட்கும் ரவுடி பேபி | ‛கட் அண்டு ரைட்'டாக பேசும் நடிகை | 'இன்ஸ்டன்ட் ஹிட்' ஆன 'ரெட்ரோ' கனிமா….. | 'மதராஸி' படப்பிடிப்பு எப்போது முடியும்? |
தமிழில் விஜய் நடித்த 'தெறி, மெர்சல், பிகில்', ஹிந்தியில் ஷாரூக்கான் நடித்த 'ஜவான்' படங்களை இயக்கி இந்திய அளவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்தவர் அட்லி.
அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை என்றாலும் படத்திற்கான வேலைகள் நடந்து வருகிறது என்கிறார்கள். இப்படத்தின் தோற்றத்திற்காக அல்லு அர்ஜுன் மும்பை சென்று மேக்கப் டெஸ்ட்களை மேற்கொள்வதாகவும் செய்திகள் வந்துள்ளது.
மிக விரைவில் ஒரு வருட காலத்திற்கும் குறைவாக இந்தப் படத்தை எடுத்துத் தருகிறேன் என அட்லி உறுதியாக சொல்லியுள்ளதால் படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் சம்மதித்ததாகத் தகவல். இந்தப் படத்தை தமிழில் உள்ள தயாரிப்பு நிறுவனம் ஒன்றுதான் தயாரிப்பதாக இருந்ததாம். ஆனால், அட்லி அவருடைய சம்பளம் 100 கோடி என்று சொன்னதால் பின்வாங்கிவிட்டார்களாம். அப்படி அட்லி அந்த சம்பளம் வாங்கிவிட்டால் தமிழ் இயக்குனர்களில் அதிக சம்பளம் பெறும் இயக்குனர் என்ற முதலிடத்தைப் பிடிப்பார். அவரது குருநாதரான ஷங்கர் கூட இவ்வளவு சம்பளம் வாங்கியல்லை.
தற்போது தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று இந்தப் படத்தைத் தயாரிக்க முன் வந்துள்ளதாகச் சொல்கிறார்கள். விரைவில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.