பாவனாவின் வருஷம் 14! | முதல் பாகத்தில் இறந்தேன்.. 2ம் பாகத்தில் நடித்துள்ளேன் ; எம்புரான் நடிகர் வைக்கும் டுவிஸ்ட் | 15 கோடி கேட்கும் ரவுடி பேபி | ‛கட் அண்டு ரைட்'டாக பேசும் நடிகை | 'இன்ஸ்டன்ட் ஹிட்' ஆன 'ரெட்ரோ' கனிமா….. | 'மதராஸி' படப்பிடிப்பு எப்போது முடியும்? | ஓடிடி.,யிலும் ஹிட் அடித்த ‛டிராகன்' | தணிக்கை குழுவினர் பாராட்டிய ‛குட் பேட் அக்லி' | பிளாஷ்பேக்: “முதல்வனை” தவறவிட்ட மூன்று முன்னணி நாயகர்கள் | பெங்களூருவில் ‛எம்புரான்' படத்திற்காக விடுமுறை அளித்து சிறப்பு காட்சிக்கும் ஏற்பாடு செய்த கல்லூரி |
பிரபாஸ் நடிப்பில் மாருதி இயக்கத்தில் உருவாகியுள்ள ராஜா சாப் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் விதமாக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்னொரு பக்கம் பிரபாஸ் தற்போது இயக்குனர் ஹனுராகவ புடி இயக்கத்தில் உருவாகி வரும் பாவ்ஜி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கதாநாயகியாக முக்கிய கதாபாத்திரத்தில் இமான்வி (இவர் முழுப்பெயர் இமான் இஸ்மாயில்) என்பவர் அறிமுகம் ஆகிறார்.
இவர் சோசியல் மீடியாவில் குறிப்பாக இன்ஸ்டாவில் ரீல்ஸ் மூலமாக ஏற்கனவே அதிக அளவில் ரசிகர்களிடம் பிரபலமானவர். இவரது ரீல்ஸ் வீடியோக்கள், குறிப்பாக இவரது பரதநாட்டிய வீடியோக்கள் மூலமாக ரொம்பவே இம்ப்ரஸ் ஆன இயக்குனர் ஹனுராகவ புடி தனது படத்தின் கதாநாயகி இவர் பொருத்தமாக இருப்பார் என முடிவு செய்து அவரை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “இமான்வியின் நடனமும் குறிப்பாக அவரது பவர்புல்லான கண்களும் எனக்கு ரொம்பவே பிடித்தன. நான் எழுதிய கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என முடிவு செய்தேன். முன்பு போல இயக்குனர்கள் தங்கள் கதாபாத்திரங்களுக்கான தேர்வை தேடுவதற்கு சிரமப்பட வேண்டாம். அதற்கு சோசியல் மீடியா இப்போது ரொம்பவே உதவியாக இருக்கிறது. பலரும் தங்களது திறமைகளை போட்டி போட்டுக் கொண்டு சோசியல் மீடியாவில் வெளிப்படுத்தி வருவதால் நம் தேர்வு எளிதாகிறது” என்று கூறியுள்ளார்.