தனுஷ் படம் குறித்து பகிர்ந்த கிர்த்தி சனோன் | சர்ச்சை வீடியோ விவகாரம் : பிக்பாஸ் விக்ரமன் வெளியிட்ட தகவல் | 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு கம்பேக் தரும் சங்கீதா | சர்தார் 2 டப்பிங் பணிகளை தொடங்கிய கார்த்தி | ரம்பாவின் சொத்து மதிப்பு 2000 கோடி: தயாரிப்பாளர் தாணு தந்த தகவல் | ஸ்ரீதேவியின் 'மாம்' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் மகள் குஷி கபூர் | ஹிந்தியில் 'டாப் ஸ்டார்' ஆகும் ராஷ்மிகா மந்தனா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனியை அரங்கேற்றும் லிடியன் நாதஸ்வரம் | நீண்ட நாள் நண்பரை கை பிடிக்கும் அபிநயா | புதிய சீரியலில் மான்யா ஆனந்த் |
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ரம்பா. தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தமிழில் நிறைய வெற்றிப் படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, போஜ்புரி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
2010ம் ஆண்டில் கனடா வாழ் இலங்கைத் தமிழரான இந்திரகுமார் பத்மநாபன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அதன்பின் கனடாவிலேயே செட்டிலாகிவிட்டார் ரம்பா. அவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கிறார்கள். அவ்வப்போது சென்னை பக்கம் வரும் ரம்பா, சில டிவி நிகழ்ச்சிகளில் நடுவராகப் பங்கேற்றுள்ளார்.
தற்போது மீண்டும் சினிமாவில் தீவிரமாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் வந்துள்ளாராம். அது பற்றி 'ராபர்' பட விழாவில் தயாரிப்பாளர் தாணு பேசும்போது, ''2000 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதி ரம்பா. அவரது கணவர் இந்திரகுமார் பெரிய பிசினஸ்மேன். சில நாட்களுக்கு முன்பு அவர் என்னிடம் வந்து ரம்பாவுக்கு மீண்டும் சினிமா வாய்ப்பு தர வேண்டும் என்று கேட்டார். நானே நல்ல கம்பெனியாகப் பார்த்து சொல்கிறேன்,'' எனப் பேசினார்.
சமூக வலைதளங்களில் ரம்பாவின் 2000 கோடி சொத்து பற்றிதான் இப்போது ரசிகர்கள் பேசி வருகிறார்கள். அவரை விடவும் அதிகமான சொத்து வைத்துள்ள நடிகர்கள், நடிகைகளும் இங்கிருக்கிறார்கள்.