ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' | 'கேம் ஆப் த்ரோன்ஸ்' புதிய தொடர் வெளியானது: உலகம் முழுக்க வரவேற்பு | 'மாஸ்டர் பிளான்' படத்தில் பொலிட்டிக்கல் பிளாக் காமெடி | வில்லனாக நடிக்க விரும்பும் முனீஷ்காந்த் | பிளாஷ்பேக்: 'நிழல்கள்' ராதுவை தெரியுமா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 பேருக்கு வாழ்வளித்த கண்ணதாசன் |

தெலுங்கில் கடந்த 2011ல் 'அல மொதலைந்தி' என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பி.வி நந்தினி ரெட்டி. கடந்த 15 வருடங்களாக தெலுங்கு சினிமாவில் தாக்கு பிடித்து, சீரான இடைவெளியில் படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் கடந்த 2013ல் 'ஜபர்தஸ்த்' என்கிற படத்தில் சமந்தாவை கதாநாயகியாக வைத்து முதன்முறையாக அவருடன் கூட்டணி சேர்ந்தார். அதைத்தொடர்ந்து 2019ல் வெளியான 'ஓ பேபி' என்கிற படத்தை சமந்தாவை வைத்து இயக்கினார். இந்த படத்தில் சமந்தா 70 வயது கிழவி, டீன் ஏஜ் பெண் என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்.
இப்படி சமந்தாவின் நடிப்புக்கு தீனி போடும் படங்களாக கொடுத்து வந்த நந்தினி ரெட்டி, 6 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தற்போது சமந்தாவை வைத்து மூன்றாவது முறையாக படம் ஒன்றை இயக்க இருக்கிறார். சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட திருவிழாவில் கலந்து கொண்டு, சினிமாவில் பெண்கள் என்கிற தலைப்பில் அவர் பேசும்போது பேச்சுவாக்கில் மீண்டும் சமந்தாவுடன் இணைந்து அடுத்த படம் செய்கிறேன் என கூறியுள்ளார் நந்தினி ரெட்டி.




