இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனியை அரங்கேற்றும் லிடியன் நாதஸ்வரம் | நீண்ட நாள் நண்பரை கை பிடிக்கும் அபிநயா | புதிய சீரியலில் மான்யா ஆனந்த் | மீண்டும் வெளியாகும் பாஸ் என்கிற பாஸ்கரன் | போதை பொருள் விளம்பரம் : ஷாருக்கான், அஜய் தேவ்கான் ஆஜராக நுகர்வோர் கமிஷன் உத்தரவு | ரசிகர் கன்னத்தில் பளார் விட்ட ராகினி | தமிழ் சினிமாவை குறை சொன்ன ஜோதிகா: மவுனம் கலைப்பாரா சூர்யா? | பிளாஷ்பேக்: முதல் கன்னடத்து பசுங்கிளி | ஆரம்பமானது 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு | பிளாஷ்பேக் : ஆன்மிக வாழ்க்கை வாழும் நடிகை சச்சு |
சின்னத்திரை பிரபலமான மணிமேகலை தமிழகத்தில் பலருக்கும் பேவரைட்டான நபராக இருந்து வருகிறார். இவரது வளர்ச்சி காண்போரை வியக்க வைக்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக இருக்கிறது. கொரோனா காலக்கட்டத்தில் சொந்த கிராமத்தில் நிலம் வாங்கி பண்ணை வீடு ஒன்றை கட்டியிருந்த மணிமேகலை, சில மாதங்களிலேயே சென்னையில் அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கினார். இதுபோக அவரிடம் இரண்டு சொகுசு கார்கள், ஒரு பைக் இருக்கிறது.
இந்நிலையில், சென்னையிலேயே மேலும் ஒரு புதிய அப்பார்ட்மெண்டை மணிமேகலை வாங்கியிருக்கிறார். அந்த வீட்டிற்கு விரைவிலேயே குடியேறப்போவதாகவும் அவர் அண்மையில் வெளியிட்டுள்ள பதிவில் மணிமேகலை குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவரது வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சியடைந்துள்ள ரசிகர்கள் மணிமேகலைக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.