டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

இந்தியன் 2 படத்தை அடுத்து ராம்சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் படத்தை இயக்கி வந்தபோது அடுத்தபடியாக ஹிந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் படத்தை ரீமேக் செய்யப்போவதாக கூறி வந்தார் இயக்குனர் ஷங்கர். அதற்கான பேச்சுவார்த்தையும் அப்போது நடைபெற்றது. தொடர்ந்து போட்டோஷுட், படம் பற்றிய அறிவிப்பு எல்லாம் வந்தது.
ஆனால் இந்தியன்-2, கேம் சேஞ்சர் படங்களின் தோல்வி காரணமாக தற்போது ஷங்கர் படத்தில் நடிப்பதில் ரன்வீர் சிங் ஆர்வம் காட்டவில்லையாம். அதன் காரணமாகவே அந்நியன் ரீமேக்கில் நடிக்க கொடுத்திருந்த கால்ஷீட்டை தற்போது டான் 3 என்ற ஹிந்தி படத்திற்கு கொடுத்து நடிக்க தொடங்கிவிட்டாராம். ரன்வீர் சிங்கின் இந்த முடிவு காரணமாக அந்நியன் ஹிந்தி ரீமேக்கை கிடப்பில் போட்டுவிட்டாராம் ஷங்கர். அனேகமாக படம் டிராப் ஆகலாம் என பாலிவுட்டில் பேசி வருகிறார்கள்.