அடுத்தடுத்து மேனேஜர்களை நீக்கிய விஷால், ரவிமோகன் | 100 மில்லியன் கடந்த சிரஞ்சீவி, நயன்தாரா பாடல் | போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் |

மலையாளத் திரைப்பட இயக்குனர் அனில் வி. நாகேந்திரன் எழுதி இயக்கியுள்ள படம் 'வீர வணக்கம்'. இந்தப் படத்தில் நடிகர்கள் சமுத்திரக்கனி கம்யூனிஸ்ட் தோழராக நடித்துள்ளார். அவருடன் நடிகர் பரத் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். மேலும் தேசிய விருது பெற்ற நடிகை சுரபி லட்சுமி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பிரபல புரட்சி பாடகியும், கேரள மக்களால் போற்றப்படும் சுதந்திரப் போராட்ட வீராங்கனையுமான 95 வயதான பி.கே. மேதினி அம்மாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
அனில் வி. நாகேந்திரன் இயக்கிய மலையாள வெற்றி படமான 'வசந்தத்தின்டே கனல் வழிகளில்' என்ற படத்தின் இரண்டாம் பாகம் தான் வீரவணக்கம். இத்திரைப்படத்திற்கு எம்கே அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி ரவீந்திரநாத்,ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே குட்டப்பன் மற்றும் அஞ்சல் உதயகுமார் என 5 இசையமைப்பாளர்கள் சேர்ந்து ஐந்து பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர்.
'சிம்மக்குரலோன்' டி. எம். சௌந்தரராஜனின் மகன் டிஎம்எஸ் செல்வகுமார் முதல் முறையாக பின்னணி பாடகராக இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். மீண்டும் டி.எம்.எஸ்ஸே பாடி உள்ளாரோ என எண்ணத் தூண்டும் வகையில் புரட்சிப் பாடலை அவர் இதில் பாடியுள்ளார்.