நாம ‛குட்'-ஆ இருந்தாலும் உலகம் ‛பேட்'-ஆக்குது : குட் பேட் அக்லி டீசர் வெளியானது | வாரிசு பட நடிகையான சம்யுக்தா விவாகரத்து | சசிகுமார் படத்தில் பரத் | கிங்ஸ்டன்-ல் விஷுவல் டிரீட் : திவ்ய பாரதி | தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமாகும் அனுராக் காஷ்யப் | மார்ச் முதல் வாரத்தில் மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு வரும் சிவராஜ்குமார் | 110 கிலோ : மிரள வைக்கும் சமந்தாவின் ஒர்க்அவுட் | டிராகன் வெற்றியை கொண்டாடிய LIK படக்குழு | நயன்தாராவிற்கு வில்லனாக அருண் விஜய்? | 'கிங்ஸ்டன்' நம்ம ஊரு 'ஹாரிபார்ட்டர்' : ஜி.வி.பிரகாஷ் |
ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்து உலகளவில் பிரபலமான பிரபாஸ், அதன் பிறகு அவர் நடித்த சாஹோ, ராதே ஷ்யாம் போன்ற படங்கள் தோல்வியடைந்தன. ஆனால் அதன்பிறகு வெளியான சலார் மற்றும் கல்கி 2898 ஏடி போன்ற படங்கள் வரவேற்பை பெற்றன. குறிப்பாக கல்லி படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து சாதனை செய்தது.
இந்த நிலையில் தற்போது தி ராஜா சாப், ஸ்பிரிட், சலார் 2 போன்ற படங்களில் நடித்து வரும் பிரபாஸ், இதையடுத்து பிரசாந்த் வர்மா இயக்கும் படத்தில் நடிக்க போகிறார். இந்த படம் சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவாகிறது என்றும் இதில் பிரபாஸ் சூப்பர் ஹீரோவாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளத. இந்த பிரசாந்த் வர்மா தான் தெலுங்கில் ஹனுமன் படத்தை இயக்கி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.