நாம ‛குட்'-ஆ இருந்தாலும் உலகம் ‛பேட்'-ஆக்குது : குட் பேட் அக்லி டீசர் வெளியானது | வாரிசு பட நடிகையான சம்யுக்தா விவாகரத்து | சசிகுமார் படத்தில் பரத் | கிங்ஸ்டன்-ல் விஷுவல் டிரீட் : திவ்ய பாரதி | தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமாகும் அனுராக் காஷ்யப் | மார்ச் முதல் வாரத்தில் மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு வரும் சிவராஜ்குமார் | 110 கிலோ : மிரள வைக்கும் சமந்தாவின் ஒர்க்அவுட் | டிராகன் வெற்றியை கொண்டாடிய LIK படக்குழு | நயன்தாராவிற்கு வில்லனாக அருண் விஜய்? | 'கிங்ஸ்டன்' நம்ம ஊரு 'ஹாரிபார்ட்டர்' : ஜி.வி.பிரகாஷ் |
நடிகர் ஷாம் நடிப்பில் உருவாகியுள்ள 'அஸ்திரம்' திரைப்படம் வருகின்ற மார்ச் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் ஷாம் கூறுகையில் "நல்ல இயக்குனருடன் நல்ல கதையில் நடிச்சிருக்கேன்னு ஒரு திருப்தி இருக்கு. 'அஸ்திரம்' படம் எனது திரை பயணத்தில் அடுத்தக்கட்டமாக இருக்குமானு மார்ச் 7ம் தேதி தெரிய வரும். கெரியர் தொடங்கும்போது நடிகராகணும்னு வந்தேன். அந்த காலகட்டத்தில் இயக்குனர் ஜீவா சார் '12பி' படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார். அப்போது எனக்கு வேற எந்த அனுபவமும் இல்லை. சில தவறுகள் நடந்தது அதை எதிர்மறையாக எடுத்துக்கிட்டு மனச்சோர்வுக்குள்ள போகிற நபர் நான் கிடையாது.
'வாரிசு' படத்துக்குப் பிறகு இந்தப் படத்துல நடிச்சிருக்கேன். தற்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் நான் நடித்து வருகிறேன் . '12பி' படத்திற்கு பிறகு அடுத்தடுத்து நான்கு படங்களை நான் ஒப்பந்தம் செய்து நடித்து வந்தேன். அந்தத் தவறை இப்போது பண்ணக்கூடாது என நான் தெளிவாக இருக்கேன். சினிமாவின் தொடக்கத்தில் எனக்கு பெரிய பயணம் அமையவில்லை. 3 வருடம் முயற்சி பண்ணினேன். அதன் பிறகு எனக்கு சினிமாவுல வாய்ப்புக் கிடைச்சது. இன்னைக்கு இருக்கிற பலர் சினிமா பயணத்தோட தொடக்கத்துல பல கடினங்களை சந்தித்துள்ளனர். எனது கெரியரின் ஆரம்பத்தில் எனக்கு சரியான வழிகாட்டி இல்லை. அந்த சமயத்தில் எனக்கு எந்த பின்புலமும் இல்லை இதை நான் குறையாக சொல்லமுடியாது. அதெல்லாம் தெரிஞ்சு தான் நான் சினிமாவுக்கு வந்தேன்" என தெரிவித்துள்ளார்.