பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் |

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'லூசிபர்' படம் பெரிய வெற்றி பெற்றது. தற்போது அதன் இரண்டாம் பாகம் 'எம்புரான்' என்ற பெயரில் தயாராகிறது. இதில் மோகன்லால் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அவருடன் பிருத்விராஜ், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர், இந்திரஜித், சுராஜ் வெஞ்சரமுடு, கிஷோர், சானியா அய்யப்பன், சசிகுமார், பாசில், உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.
இந்த படத்தின் ஒரு பகுதி கதை வெளிநாட்டில் நடக்கிறது. அதில் வெளிநாட்டு வில்லனாக பிரபல ஹாலிவுட் நடிகர் ஜெரோம் பிலைன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்மர் ஸ்டோரி, டு கில் ஏ பிரிஸ்ட். கல்பா, பீஸ்ட், லவ்விங் வின்சென்ட், ஜான் விக் சேப்டர் 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரையில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சிறந்த சின்னத்திரை நடிகருக்கான பிரிட்டிஷ் அகாடமி விருதையும் வென்றுள்ளார்.




