'கேங்கர்ஸ்' படத்துக்கு வரும் புது சிக்கல் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : மூன்று வேடங்களில் நடித்த ஹோன்னப்ப பாகவதர் | அஜித்தின் அடுத்த படம்: சஸ்பென்ஸாக இருக்கும் நிறுவனம் | அஜித்தின் 'டாப் வசூல்' படமாக மாறுமா 'குட் பேட் அக்லி' | நடிகர் நானிக்கு ஓடிடி-யில் அடித்த ஜாக்பாட் | குபேரா : தெலுங்குக்கே முன்னுரிமை? | மகனுக்காக திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி அன்னதானம் செய்த பவன் கல்யாண் மனைவி | 6 மாதத்தில் 15 கிலோ எடை குறைத்த ரஜிஷா விஜயன் | குஞ்சாக்கோ போபன் - பாவனா எதிர்பாராத சந்திப்பு |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து கடந்த 2021ம் ஆண்டு வெளிவந்த படம் புஷ்பா. அப்படத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். 200 கோடி பட்ஜெட்டில் உருவான அப்படம் 500 கோடி வசூலித்தது. மீண்டும் சுகுமார் இயக்கத்தில் அதே கூட்டணி புஷ்பா -2 படத்தில் இணைந்தார்கள். 500 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 1800 கோடி வரை வசூலித்தது.
இந்த நிலையில் தற்போது அல்லு அர்ஜுன் அளித்துள்ள ஒரு பேட்டியில், புஷ்பா-2 படத்தில் இடம்பெற்ற பெண் காட்சி குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், புஷ்பா -2 படத்தின் ஒரு பாடல் காட்சியில் புடவை அணிந்து பெண்ணை போன்று வேடமிட்டு நடிக்க வேண்டும் என்று இயக்குனர் சொன்னதும் முதலில் பயந்து விட்டேன். என்றாலும் அதன்பிறகு அந்த கேரக்டரை என் மனதில் உள்வாங்கி எனக்கு நானே ஒரு தைரியத்தை வர வைத்துக் கொண்டு அதில் நடித்தேன். அந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்திருப்பது எனக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார் அல்லு அர்ஜுன்.