மனைவியுடன் இணைந்து நடிப்பேன் : ஆதி | தயாரிப்பாளர்களுக்கு அடுக்குமாடி கட்டிடம் : அரசாணை புதுப்பிப்பு | கபில் சர்மா சம்பளம் 5 கோடி? | சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை: ஷங்கரின் விளக்கம் என்ன? | டிக்கெட் கட்டணம், இரட்டை வரி விதிப்பில் மாற்றம் வருமா? | தியேட்டரில் வெளியாகும் அனுஷ்காவின் 'காதி' டிரைலர் | சவுரவ் கங்குலி பயோபிக் படத்தில் ராஜ்குமார் ராவ் | ஏ.ஆர்.ரஹ்மானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த சாய்ரா பானு! | மூன்று நாட்கள் மவுன விரதம் கடைபிடித்த சமந்தா! | 'டிராகன்' - பெயருக்காக எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா….. |
'கங்குவா' படத்தையடுத்து நடிகர் சூர்யா, தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் துவங்கிய படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் ஸ்வாசிகா, யோகி பாபு, ஷிவதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களை நடிக்கின்றனர்.
சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வெளிச்சை எனும் பகுதியில் 'சூர்யா 45' படத்திற்கான படப்பிடிப்பு நடத்துவதாக இருந்தது. இதற்கான படப்பிடிப்பு கருவிகளுடன் படக்குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். இதனையறிந்த அதிகாரிகள் அந்த பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்ததில், உரிய அனுமதி இல்லாமல் படப்பிடிப்பு நடத்துவது தெரியவந்தது.
இதனையடுத்து அனுமதி இல்லாமல் படப்பிடிப்பு நடத்த அதிகாரிகள் தடை விதித்து, படப்பிடிப்பு கருவிகள் திருப்பி அனுப்பினர். மேலும், உரிய அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்துமாறு ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சூர்யாவுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.