மனைவியுடன் இணைந்து நடிப்பேன் : ஆதி | தயாரிப்பாளர்களுக்கு அடுக்குமாடி கட்டிடம் : அரசாணை புதுப்பிப்பு | கபில் சர்மா சம்பளம் 5 கோடி? | சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை: ஷங்கரின் விளக்கம் என்ன? | டிக்கெட் கட்டணம், இரட்டை வரி விதிப்பில் மாற்றம் வருமா? | தியேட்டரில் வெளியாகும் அனுஷ்காவின் 'காதி' டிரைலர் | சவுரவ் கங்குலி பயோபிக் படத்தில் ராஜ்குமார் ராவ் | ஏ.ஆர்.ரஹ்மானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த சாய்ரா பானு! | மூன்று நாட்கள் மவுன விரதம் கடைபிடித்த சமந்தா! | 'டிராகன்' - பெயருக்காக எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா….. |
சேரன் இயக்கி, ஹீரோவாகவும் நடித்த கிளாஸிக் சூப்பர் ஹிட் படம் ஆட்டோகிராப். 2004ல் வெளியான இந்த படத்தில் சினேகா, கோபிகா, கனிகா, மல்லிகா ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்தனர்.
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு ஆட்டோகிராப் மாதிரியான பல நினைவுகள் இருக்கும். இந்தப்படம் அப்படி ஒரு படமாக வெளிவந்தது. சேரனின் பள்ளிக்காலம், அப்போது வரும் காதல், பின்னர் கல்லூரிக்கால வாழ்க்கை, அங்கு ஏற்பட்ட ஒரு காதல், பின்னர் அந்த காதல் தந்த தோல்வி, அந்த தோல்வியிலிருந்து மீண்டு தோள் கொடுக்க உதவிய ஒரு நல்ல தோழி என பல விஷயங்களை இந்த படம் காட்டியது.
பரத்வாஜின் இசையில் வெளிவந்த ‛ஞாபகம் வருதே..., மனசுக்குள்ளே தாகம்..., ஒவ்வொரு பூக்களுமே..., நினைவுகள் நெஞ்சில்...' என எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. தமிழில் ஹிட் அடித்த இந்த படம் தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் ரீ-மேக் ஆனது.
இந்தப்படம் வெளியாகி 21 ஆண்டுகளை கடந்த நிலையில் இப்போது புத்தம் புதிய பொலிவுடன், இந்தக்காலத்திற்கு ஏற்றபடி மெருகேற்றி ரீ-ரீல்ஸ் செய்ய உள்ளனர். இதற்கான அறிவிப்பை இன்றைய டிரெண்டிங் தொழில்நுட்பமான ஏஐ., மூலம் ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.