விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! |

2025ம் ஆண்டில் கடந்து போன இந்த ஆறு வாரங்களில் அதிகபட்சமாக கடந்த வாரம் 9 புதிய திரைப்படங்கள் வெளிவந்தன. அவற்றுடன் சேர்த்து இந்த வருடத்தின் ஒன்றரை மாதங்களிலேயே 36 படங்கள் வெளிவந்துவிட்டன.
இந்த வாரம் பிப்ரவரி 21ம் தேதி 'டிராகன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், ஈடாட்டம், பிறந்தநாள் வாழ்த்துகள், பல்லவபுரம் மனை எண் 666” ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் வெளிவந்த ஒன்பது படங்களுக்கே குறிப்பிடத்தக்க அளவில் கூட தியேட்டர்கள் கிடைக்கவில்லை. மற்ற மொழிப் படங்களும் வேறு வந்ததால் மொத்தமாக ஒவ்வொரு படத்திற்கு நூற்றுக்கும் குறைவான தியேட்டர்கள் மட்டுமே கிடைத்திருக்கும்.
அவற்றில் ஒரு படம் கூட கடந்த மூன்று நாட்களில் ஹவுஸ்புல் ஆகவில்லை. இதுதான் தமிழ் சினிமாவில் நிலையாக உள்ளது. பத்து நாட்களுக்கு முன்னதாக வெளியான 'விடாமுயற்சி' படம் கூட முதல் நாளில் பல தியேட்டர்களில் ஹவுஸ்புல் ஆகவில்லை என்பதுதான் நிலைமையாக இருந்தது.
தெலுங்கில் அதற்குள்ளாகவே 4 படங்கள் 100 கோடி வசூலைக் கடந்துவிட்டன. தமிழில் 'விடாமுயற்சி' படம் மட்டும்தான் 100 கோடி கடந்தது. ஆனால், அதுவும் லாபகரமாக அமையவில்லை என்பதுதான் தகவல்.