சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி | லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்… | வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி | ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு |

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு கார்த்திக்கு சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் அமையவில்லை. 'ஜப்பான்' படத்தின் தோல்விக்கு பிறகு வெளியான 'மெய்யழகன் 'படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டாலும் பெரிய வசூலைத் தரவில்லை. அவர் வில்லனாக அறிமுகமான 'கங்குவா 'படமும் படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் அவர் நடித்து வரும் படம்தான் 'வா வாத்தியார்'.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் . கார்த்தியுடன் சத்யராஜ், ராஜ்கிரண், கிர்த்தி ஷெட்டி, ஜி.எம்.சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் டீஸர் வெளியாகி ஏழு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது. இந்நிலையில் 'வா வாத்தியார்' படத்தில் இடம்பெற்ற ' உயிர் பத்திக்காம..' எனத் தொடங்கும் முதல் பாடலும் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத பின்னணி பாடகர் விஜய் நாராயண், பின்னணி பாடகி ஆதித்யா ரவீந்திரன் , பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.
டீசரும், முதல் பாடலும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். பட வெளியீட்டுக்கு பிறகுதான் கார்திக்கு வாத்தியார் கைகொடுப்பாரா என்பது தெரிய வரும்.