எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் | பிளாஷ்பேக்: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை இசை அமைப்பாளராக்கிய ஸ்ரீதர் | திரையுலகில் 50 ஆண்டுகள்: முத்துலிங்கத்திற்கு பாராட்டு விழா நடத்தும் எழுத்தாளர் சங்கம் | ஆஸ்கர் விருதுக்கு சென்ற படத்திற்கு இந்தியாவில் தடை | சிவாஜியின் அன்னை இல்லம் எனக்கே சொந்தம்: நீதிமன்றத்தில் பிரபு மனு | பிளாஷ்பேக்: பாகவதர் நடிக்காததால் தோல்வி அடைந்த படம் | ஹார்டிஸ்க் ஒப்படைப்பு: தீர்ந்தது சோனா பிரச்னை | ஒவ்வொரு முறையும் உங்களை தேர்வு செய்வேன் : நயன்தாரா |
வளர்ந்து வரும் கன்னட நடிகை குஷி ரவி. 'தியா' என்ற கன்னட படத்தின் மூலம் புகழ்பெற்ற இவர் அதற்கு பிறகு 'பிண்டம்' என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தற்போது ''பட்டி' என்ற இசை ஆல்பத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார்.
வார் ஹார்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில், தீபா லக்ஷ்மண் பிரபு தயாரிப்பில் சத்தியசீலன் இயக்கத்தில் பிரியா மாலி இசையில் விவேக் வரிகளில் உருவாகி உள்ள ஆல்பம் 'பட்டி'. இதில் தர்ஷன், குஷி ரவி நடித்து ஆடி உள்ளனர். இதனை இயக்கி உள்ள சத்யசீலன், லோகேஷ் கனகராஜின் உதவியாளர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த ஆல்பம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. சுதந்திரமான பெண்ணாக வாழும் தீபாவுக்கு பைக் ஓட்டுவது, துல்லிய ஒலிகளை கேட்பது என்றால் கொள்ளை பிரியம். அவர் தன் காதலை 'பட்டி' என்று செல்லமாக அழைக்கிறார். காதலர்கள் இருவரும் ஏற்காட்டுக்கு பைக்கில் செல்லும் போது எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்கிறது. இது அவர்களது வாழ்க்கையை எப்படி புரட்டி போட்டது என்பது தான் ஆல்பத்தின் கதை. பிரவீன் ஜி நடனம் அமைத்துள்ளார்.