ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பல நடிகைகளை அறிமுகப்படுத்தியவர் பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு. இவரது படங்கள் உணர்வுப்பூர்வமாக இருக்கும். அதிலும் குறிப்பாக மோகன்லாலாலும் இவரும் இணைந்து உருவான ‛நாடோடி காட்டு, பட்டினப்பிரவேசம், ரசதந்திரம், சிநேக வீடு' மற்றும் இவர்கள் கூட்டணியில் கடைசியாக வெளியான ‛என்னும் எப்பொழும்' ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்தமானவை. அந்த வகையில் கிட்டத்தட்ட 10 வருடம் கழித்து மீண்டும் சத்யன் அந்திக்காடு, மோகன்லால் இருவரும் ‛ஹிருதயபூர்வம்' என்கிற புதிய படத்திற்காக இணைந்துள்ளனர்.
இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். பூவே உனக்காக சங்கீதா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் கதையை சத்யன் அந்திக்காடுவின் மகன்களில் ஒருவரும் இயக்குனருமான அகில் சத்யன் எழுதியுள்ளார். இன்று (பிப்.,10) இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. வரும் ஆகஸ்ட் 28ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக இந்த படம் வெளியாக இருக்கிறது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.