'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்கிற படம் வெளியானது. இயக்குனர் கவுதம் மேனன் முதன்முறையாக இந்த படத்தை இயக்கியதன் மூலம் மலையாள திரையுலகில் அடி எடுத்து வைத்தார். இந்த படம் ஓரளவு டீசண்டான வெற்றியை பெற்றது. இதுவரை தொடர்ந்து மம்முட்டி ஏற்கனவே நடித்து திரைக்கு வர தயாராக இருந்த பஷூக்கா திரைப்படம் பிப்ரவரி 14 வரும் காதலர் தினத்தன்று வெளியாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி வரும் சித்திரை விஷு கொண்டாட்டமாக ஏப்ரல் பத்தாம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டு புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை டினோ டென்னிஸ் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இவர் மறைந்த பிரபல மலையாள கதாசிரியரான கலூர் டென்னிஸ் என்பவரின் மகன். அவரது கதைகளில் ஏராளமான ஹிட் படங்களில் மம்முட்டி நடித்துள்ளார். அந்த நட்பின் அடிப்படையில் அவரது மகனை தனது படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்துகிறார் மம்முட்டி. ஆச்சரியமாக இந்த படத்தில் கவுதம் மேனனும் பெஞ்சமின் ஜோஸ்வா என்கிற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.