சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர். ஒரு கட்டத்தில் தான் நடித்த 'மணிகர்ணிகா' படம் மூலம் டைரக்டராகவும் மாறினார். சமீபத்தில் வெளியான 'எமர்ஜென்சி' படத்தின் மூலம் டைரக்டராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தன்னை மாற்றிக் கொண்ட கங்கனா, இன்னொரு பக்கம் அரசியலில் களமிறங்கி தேசிய கட்சியான பா.ஜ.,வில் இணைந்து கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆகவும் வெற்றிப் பெற்றார். இந்த நிலையில் ஹோட்டல் ஆரம்பிக்கும் அவரது நீண்ட நாள் கனவையும் தற்போது நிறைவேற்றிக் கொண்டுள்ளார் கங்கனா.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக 'தி மவுண்டைன் ஸ்டோரி' என்கிற பெயரில் இந்த ஹோட்டலை துவங்கியுள்ளார் கங்கனா. இதுவரை தான் பல ஊர்கள், பல நாடுகளில் சுற்றியபோது தன்னை கவர்ந்த, தான் கண்டுபிடித்த விதவிதமான உணவு வகைகள் அனைத்துமே இந்த ஹோட்டலில் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கில் இதை துவங்கியுள்ளாராம் கங்கனா. ஹோட்டல் வேலைகள் முழுமையாக நிறைவு பெற்று சமீபத்தில் அங்கே சென்று விசிட் அடித்துள்ள கங்கனா, பலருக்கும் அங்கே விருந்து பரிமாறுவது போன்று ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். வரும் நவம்பர் 14ம் தேதி காதலர் தினத்தன்று இந்த ஹோட்டலின் திறப்பு விழா நடைபெற இருக்கிறது.