'எல் 2 எம்புரான்' படத்தின் பட்ஜெட் இவ்வளவுதானா ? | அஜித், தனுஷ் கூட்டணியை உறுதி செய்த தயாரிப்பாளர்! | சல்மான்கான் சொன்ன கதைக்கு மறுப்பு தெரிவித்து ஏ.ஆர். முருகதாஸ்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தின் புதிய அப்டேட்! | பாவனாவின் வருஷம் 14! | முதல் பாகத்தில் இறந்தேன்.. 2ம் பாகத்தில் நடித்துள்ளேன் ; எம்புரான் நடிகர் வைக்கும் டுவிஸ்ட் | 15 கோடி கேட்கும் ரவுடி பேபி | ‛கட் அண்டு ரைட்'டாக பேசும் நடிகை | 'இன்ஸ்டன்ட் ஹிட்' ஆன 'ரெட்ரோ' கனிமா….. | 'மதராஸி' படப்பிடிப்பு எப்போது முடியும்? |
ஹிந்தி படங்களில் நடித்து வந்த ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடித்த ‛தேவரா' என்ற படத்தில் அறிமுகமானவர், அதையடுத்து ராம் சரணின் 16வது படத்தில் நடிக்கப் போகிறார். தற்போது அவர் ஹிந்தியில் ‛பரம் சுந்தரி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஜான்வி கபூரின் தங்கையான குஷிகபூர் ஹிந்தியில் நடித்துள்ள ‛லவ் யபா' என்ற படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. இப்படம் தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படத்தின் ஹிந்தி ரீமேக் ஆகும்.
அமீர் கானின் மகன் ஜூனைத் கான் நாயகனாகவும், குஷி கபூர் நாயகியாகவும் நடித்துள்ளார்கள். இப்படத்தில் தனது தங்கை குஷி கபூரின் நடிப்பு குறித்து ஜான்வி கபூர் வெளியிட்டுள்ள செய்தியில், ‛எனது சகோதரி குஷி கபூர் இந்த படத்துக்காக மிகவும் கடினமாக உழைத்தார். தான் விரும்பிய நடிப்பை கொண்டு வர வேண்டும் என்பதற்காக நிறைய மெனக்கெட்டார். அவரது நடிப்பு மிகச் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்,' என்று தெரிவித்திருக்கிறார் ஜான்வி கபூர்.