இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடித்து இந்த பொங்கலுக்கு திரைக்கு வந்த படம் மதகஜராஜா. இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கு வந்த போது மைக்கை பிடித்தபோது விஷாலின் கைகள் நடுங்கியது. அதன் பிறகு அவரை பற்றி பலவிதமான செய்திகள் வெளியாகின. என்றாலும் தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விட்டார் விஷால். குறிப்பாக 12 ஆண்டுகளாக முடங்கி கிடந்த படம் தற்போது வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதால் உற்சாகம் அடைந்திருக்கும் விஷால், அடுத்தடுத்து புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார்.
இந்த நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு தனது வீட்டில் இருந்து சைக்கிளில் சென்றுள்ளார் விஷால். அது குறித்து அவரிடத்தில் கேட்டபோது, ‛‛சைக்கிளில் ஓட்டுவது நல்லது தானே, வசதியாக இருக்கிறது, டிராபிக் பிரச்னை இருக்காது. மதகஜராஜா படம் வெற்றி பெற்றால் ஒரு விஷயத்தை செய்வதாக சொல்லியிருந்தேன். அதனால் சாமியை வணங்கி விட்டு அந்த விஷயத்தை செய்ய துவங்கி உள்ளேன்.
மேலும், சின்ன படங்கள் பற்றி நான் ஏற்கனவே சொன்னேன். அப்போது என்னை வில்லனாக பார்த்தார்கள். இப்ப திரும்பவும் சொல்றேன். தயவு செய்து 1 கோடியிலிருந்து 4 கோடிக்குள் படம் எடுக்க நினைப்பவர்கள் இன்னும் ரெண்டு வருஷத்திற்கு சினிமாவிற்கு வராதீங்க. அதற்கு பதிலாக உங்கள் குழந்தைகள் பெயரில் ‛எப்டி' போடுங்க. இல்லையென்றால் நிலம் மாதிரி சொத்து வாங்குங்க. மிகவும் மோசமான நிலையில் சினிமா உள்ளது. இதை யாரும் சொல்ல மாட்டார்கள். காசு இருப்பவர்கள் யாரு வேண்டுமானாலும் படம் எடுக்கலாம். ஏன் விஜய் மல்லையா, அம்பானியிடம் இல்லாத பணமா. ஆனால் அவர்களுக்கு தெரியும் சினிமாவில் முதலீடு செய்தால் உறுதியாக லாபம் கிடைக்குமா என தெரியாது. குறிப்பாக சின்ன படங்களின் நிலை கேள்விகுறியாக உள்ளது'' என்றார்.