நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

தமிழில் ஆட்டோகிராப், தசாவதாரம், வேட்டையாடு விளையாடு, பொன்னியின் செல்வன் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ரவி வர்மன். இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கி வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தில் பணியாற்றி வருகிறார். பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, கௌரி கிஷான், சீமான் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார்.
இந்த நிலையில் ரவி வர்மன் தற்போது அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தில் உறுப்பினராக இணைக்கப்பட்டிருக்கிறார். இதுவரை இந்திய அளவில் சந்தோஷ் சிவன் மட்டுமே அந்த சங்கத்தில் உறுப்பினராக இருந்து வந்தார். அவரை தொடர்ந்து இரண்டாவது இந்தியராக தற்போது ரவிவர்மனும் அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தில் உறுப்பினராகி உள்ளார்.
இதையடுத்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அவரது சாதனையை பாராட்டி கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள். இது குறித்து புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.