அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி | உருட்டு உருட்டு : நாகேஷ் பேரன் நாயகனாக நடிக்கும் படம் |
ஒரு திரைப்படத்திற்கான டைட்டில் என்பது அப்படத்திற்கான அடையாளம், முகவரி போன்றது. அப்படியான டைட்டிலை மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருப்பதற்காக சம்பந்தப்பட்ட சங்கத்தில் தயாரிப்பு நிறுவனங்கள் முன்பே பதிவு செய்து வைப்பது வழக்கமான ஒன்று. ஆனாலும், எப்போதாவது ஒரே மாதிரியான இரு படங்களுக்கு சூட்டுவதால் சிக்கல் ஏற்பட்டு விடுகிறது. அந்த சமயத்தில் யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்து சமரசம் ஆவதன் மூலம் பிரச்னை முடிவுக்கு வரும்.
பழைய படங்களின் டைட்டிலை பயன்படுத்துவதும் தற்போது அதிகரித்துள்ளன. இதில், அந்த பழைய படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் முன் அனுமதி பெற்றப்பிறகே அதே டைட்டிலை தங்கள் படத்திற்கு பயன்படுத்துவர்.
தற்போது ஒரே டைட்டிலுக்கு நடிகர் சிவகார்த்திகேயனும், நடிகர் விஜய் ஆண்டனியும் மோதிக்கொண்டுள்ளனர். இருவரின் 25வது படத்திற்கு தான் இந்த பிரச்னை. அதாவது, அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி தயாரித்து நடித்திருக்கும் 'சக்தித் திருமகன்' என்ற படத்தின் தெலுங்கு பதிப்பை 'பராசக்தி' என்ற பெயரில் வெளியிடுவதாக அறிவித்தனர். அதேபோல், டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 25வது படத்திற்கும் 'பராசக்தி' என டைட்டில் வைத்துள்ளதாகவும், அதே டைட்டிலுடன் தான் தெலுங்கிலும் வெளியாவதாக அறிவித்தனர்.
தெலுங்கில் இரு படங்களும் ஒரே பெயரில் வெளியாவதாக அறிவித்தது குழப்பத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விஜய் ஆண்டனி தனது எக்ஸ் பக்கத்தில், 'பராசக்தி' தெலுங்கு டைட்டில் உரிமையை கடந்த வருடம் ஜூலை மாதமே தென்னிந்திய பிலிம் சேம்பரில் பதிவு செய்த ஆதாரத்தை பகிர்ந்திருந்தார்.
அதேநேரத்தில், 1952ல் வெளிவந்த பராசக்தி படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனத்திடம் முறையான அனுமதி பெற்றப்பிறகு, ஜனவரியில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்ததாக சிவகார்த்திகேயன் பட தயாரிப்பு நிறுவனம் ஆதாரத்துடன் வெளியிட்டது. இப்படி மாறி மாறி பதிவு செய்த ஆதாரத்தை வெளியிட்டதால் மேலும் குழப்பம் நீடித்தது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் (டான் பிக்சர்ஸ்), விஜய் ஆண்டனி மற்றும் சக்தித் திருமகன் பட இயக்குனர் அருண் பிரபு ஆகியோர் திடீரென சந்தித்துக்கொண்டனர். இவர்கள் பட டைட்டில் தொடர்பாக விவாதித்து ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பட டைட்டில் விவகாரத்தில் விஜய் ஆண்டனி விட்டுக்கொடுத்து தெலுங்கில் வேறு டைட்டில் வைப்பார் எனத் தெரிகிறது.