தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

'கல்லுக்குள் ஈரம்'படத்தில் அறிமுகமானார் விஜயசாந்தி. ஆனால் அந்த படம் வெற்றி பெறாததால் அடுத்து அவருக்கு பெரிதாக எந்த படமும் அமையவில்லை. 'நெற்றிக் கண்'படத்தில் நடித்தாலும் அதில் ரஜினிதான் பேசப்பட்டார்.
இந்த நிலையில் அவர் நடித்த படம்தான் 'இளஞ்சோடிகள்'. ஹிந்தியில் வெளிவந்த 'லவ் 86' என்ற படத்தை தழுவி உருவான படம். அலைகள் ஓய்வதில்லை ஜோடி கார்த்திக் ராதா நடித்தனர். இன்னொரு ஜோடி பன்னீர் புஷ்பங்கள் படத்தில் நடித்த சுரேஷ். அவருக்கு ஜோடியாக நடித்தவர் விஜயசாந்தி.
விஜயசாந்தியின் தந்தை சீனிவாசன் மகளுக்காக வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த நேரத்தில் கலைஞானத்தை சந்தித்து இளஞ்ஜோடிகள் படத்தில் வாய்ப்பு வாங்கி கொடுங்கள் என் மகளுக்கு ஒரு பிரேக் வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். கலைஞானம் தான் 'இளஞ்சோடிகள்' படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதினார்.
கலைஞானம் விஜயசாந்தியை ராம நாராயணனிடம் அழைத்துச் சென்றார். 'இந்த படத்தில் கவர்ச்சியாக நடிக்க வேண்டும், நீச்சல் உடை அணிய வேண்டும் முடியுமா” என்று ராம நாராயணன் கேட்க அதற்கு விஜயசாந்தி சம்மதித்ததும் சுரேஷ் ஜோடியாக நடித்தார். படம் ஆபாசமாக இருப்பதாக கடும் விமர்சனங்கள் வந்தாலும் படம் 100 நாள் ஓடியது. தெலுங்கில் டப் செய்யப்பட்டு அங்கு 125 நாட்கள் ஓடியது. இந்த படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு இரண்டிலுமே விஜயசாந்திக்கு வாய்ப்புகள் வந்தன. 'பூ ஒன்று புயலானது' படம் அவரை ஆக்ஷன் ஹீரோயின் ஆக்கியது.




