''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
1980- 90களில் தென்னிந்திய சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் விஜயசாந்தி. தமிழில் கடைசியாக 2003ம் ஆண்டு ஸ்ரீ பண்ணாரி அம்மன் என்ற படத்தில் நடித்த விஜயசாந்தி, அதையடுத்து தெலுங்கில் 2006க்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் அரசியலில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில், 13 ஆண்டுகளுக்கு பிறகு 2020ம் ஆண்டு மகேஷ்பாபு நடித்த சாரிலேரு நீக்கவாரு என்ற படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார் விஜய சாந்தி. அதையடுத்து தற்போது தெலுங்கில் கல்யாண்ராம் நடிக்கும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். பிரதீப் சில்குரி என்பவர் இயக்கும் இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இப்படத்தில் சாய் மஞ்சுரேக்கர் என்பவர் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் கமிட்டாகி இருப்பது குறித்து விஜயசாந்தி கூறுகையில், சாரிலேரு நீக்கவாரு என்ற படத்திற்கு பிறகு சில படங்கள் வந்த போதும் கதை மற்றும் கதாபாத்திரம் என்னை பிடிக்காததால் அந்த படங்களில் நடிக்கவில்லை. ஆனால் இந்த படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரம் என்பதால் ஒப்பந்தமாகி இருக்கிறேன். அதோடு, என்னை இம்ப்ரஸ் பண்ணக்கூடிய கேரக்டர்கள் கிடைத்தால் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்றும் விஜயசாந்தி தெரிவித்திருக்கிறார்.