நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்து வெளிவந்துள்ள படம் 'லியோ'. இப்படத்தின் முதல் நாள் வசூல் 148 கோடியே 50 லட்சம் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த ஆண்டில் முதல் நாள் வசூலாக அதிகத் தொகை வசூலித்துள்ள ஒரு இந்தியத் திரைப்படம் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
எந்தெந்த மாநிலங்களில், எந்தெந்த நாடுகளில் எவ்வளவு வசூல் என அந்த 'பிரேக்-அப்'பையும் சேர்த்து ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்கள். அதன்படி தமிழகத்தில் 34 கோடி, கேரளாவில் 12 கோடி, கர்நாடகாவில் 14 கோடி, ஆந்திரா, தெலங்கானாவில் 16 கோடி, வட இந்தியாவில் 4 கோடி, வளைகுடா நாடுகளில் 20 கோடி, அமெரிக்காவில் 18 கோடி, இங்கிலாந்தில் 13 கோடி, இதர வெளிநாடுகளில் 11.5 கோடி, மலேசியாவில் 6 கோடி என தெரிவித்துள்ளார்கள்.
முதல் நாள் வசூலில் இவ்வளவுத் தொகை வசூல் என்பது சாத்தியமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. ஷாரூக்கான் நடித்து வெளிவந்த 'ஜவான்' படம் 'லியோ' படத்தைவிட உலக அளவில் அதிக தியேட்டர்களில் வெளியானது. ஷாரூக்கை விடவும் விஜய் வசூலில் பெரிய சாதனைகளை படைத்தது இல்லை. அப்படிப்பட்ட ஷாரூக் நடிப்பில் வெளிவந்த 'ஜவான்' படத்தின் முதல் நாள் வசூல் 129 கோடி. ஆனால், அதை விடவும் 19 கோடியை அதிகமாக வசூலித்து 'லியோ' எப்படி 148 கோடி வசூலிக்க முடியும் என திரையுலகத்திலேயே சந்தேகத்தை எழுப்புகிறார்கள்.
பட வெளியீட்டிற்கு முன்பாக இந்தப் படத்திற்கு வேண்டுமென்றே மிகப் பெரிய எதிர்பார்ப்பை திட்டமிட்டு உருவாக்கினார்கள். படத்திற்கான விமர்சனங்கள் நெகட்டிவ்வாகவும் வருவதால், அதைச் சரி செய்ய தற்போது முதல் நாள் வசூலைக் கையில் எடுத்திருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். இந்த ஐந்து தின விஜயதசமி விடுமுறை முடிவதற்குள்ளாகவே 500 கோடி வசூலித்தது என வெளியிடுவார்கள் என்றும் கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.