'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

ஜெயிலர், லால் சலாம் படங்களை அடுத்து ஞானவேல் இயக்கும் தனது 170 வது படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். பொழுதுபோக்கு மற்றும் கருத்துள்ள கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் ரஜினி உடன் அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்க அனிருத் இசை அமைக்கிறார்.
இந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171வது படத்தில் ரஜினி நடிக்க இருக்கும் நிலையில், அந்தப் படத்திலும் 170 வது படத்தில் வில்லனாக நடிக்கும் அதே பஹத் பாசிலே வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது இன்னொரு மலையாள நடிகரான பிரித்விராஜை, வில்லனாக லோகேஷ் கனகராஜ் ஒப்பந்தம் செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே தமிழில் ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்த கனா கண்டேன் என்ற படத்தில் பிரித்விராஜ் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




