ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் கூலி மற்றும் பிரபாஸின் சலார் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஸ்ருதிஹாசனிடத்தில் கடந்த மாதத்தில் திருமணம் குறித்து மீடியாக்கள் கேள்வி கேட்டபோது, காதலிப்பது எனக்கு பிடிக்கும். அவருடன் பயணிப்பதும் பிடிக்கும். என்றாலும் காதலிக்கும் நபர்களையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது குறித்து நான் யோசித்ததில்லை என்று கூறியிருந்தார்.
இப்படியான நிலையில் மீண்டும் நிருபர்கள் அவரிடத்தில் திருமணம் குறித்து கேள்வி கேட்டதால் கடும் கோபத்துக்கு ஆளாகி இருக்கிறார் ஸ்ருதிஹாசன். அவர்களை நோக்கி, எதற்காக என் திருமணத்தில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்கள்? என்னுடைய திருமணத்திற்கு நீங்கள் கரண்டு பில் கட்ட போகிறீர்களா? இல்லை சாப்பாடு போட போகிறீர்களா? அப்படி இல்லைன்னா இன்விடேஷன் ஆவது அடிச்சு கொடுக்கப் போறீங்களா? என்று கோபமாக கேள்வி கேட்ட ஸ்ருதிஹாசன், இனிமேல் திருமணம் குறித்து என்னிடத்தில் யாரும் கேள்வி கேக்காதீர்கள் என்று எச்சரிக்கும் தொனியில் பதில் கொடுத்திருக்கிறார்.