'கேங்கர்ஸ்' படத்துக்கு வரும் புது சிக்கல் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : மூன்று வேடங்களில் நடித்த ஹோன்னப்ப பாகவதர் | அஜித்தின் அடுத்த படம்: சஸ்பென்ஸாக இருக்கும் நிறுவனம் | அஜித்தின் 'டாப் வசூல்' படமாக மாறுமா 'குட் பேட் அக்லி' | நடிகர் நானிக்கு ஓடிடி-யில் அடித்த ஜாக்பாட் | குபேரா : தெலுங்குக்கே முன்னுரிமை? | மகனுக்காக திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி அன்னதானம் செய்த பவன் கல்யாண் மனைவி | 6 மாதத்தில் 15 கிலோ எடை குறைத்த ரஜிஷா விஜயன் | குஞ்சாக்கோ போபன் - பாவனா எதிர்பாராத சந்திப்பு |
விஜய் நடித்த 'வாரிசு', ஷங்கர் இயக்கிய 'கேம் சேஞ்ஜர்' படங்களைத் தயாரித்த பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு வீடு, அலுவலகங்களில் சில தினங்களுக்கு முன்பு வருமான வரி சோதனை நடைபெற்றது. அவர் மட்டுமல்லாது மேலும் சில தெலுங்கு தயாரிப்பாளர்களிடமும் சோதனை நடைபெற்ற தெலுங்குத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வருமான வரி சோதனை பற்றி தில் ராஜு பேசியுள்ளார். “2008க்குப் பிறகு 16 வருடங்கள் கழித்து இப்போதுதான் எங்களது இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதனிடையே எனது கணக்கு ஆவணங்களை மூன்று முறை சோதனையிட்டுள்ளனர். வியாபாரம் செய்பவர்களிடம் வருமான வரி சோதனை நடைபெறுவது வழக்கமான ஒன்று. நடைபெற்ற வருமான வரி சோதனையில் ஆவணங்கள், பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக வந்த தகவல்கள் தவறானவை. அப்படி எதுவும் நடக்கவில்லை. தவறான ஆவணங்கள், பணம் ஆகியவை என என்னிடம் எதுவும் கிடையாது.
என்னிடம் மற்றும் எனது குடும்பத்தினரிடம் என மொத்தமாக 20 லட்ச ரூபாய் பணம் வைத்திருந்தோம். அதற்கான உரிய ஆவணங்களையும் சமர்ப்பித்தோம். கடந்த ஐந்து வருடங்களில் நான் எந்த சொத்தையும் வாங்கவில்லை. எனது திரைப்படத் தயாரிப்பில் உள்ள அனைத்து விவரங்களையும் விவரமாக எடுத்து சொன்னேன். எங்களது ஆவணங்கள் அனைத்தும் சரியானவையாகவும், தெளிவாகவும் இருந்ததாக சொன்னார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.