ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! | நாட்டின் மிகப்பெரிய நட்சத்திரத்தோடு போட்டியிட முடியுமா? சுதா கொங்கரா | மீண்டும் தள்ளிப்போனது 'தெறி' ரீ ரிலீஸ் | மதுரை, திருநெல்வேலி, திருச்செந்துார்... ஜீவா ஓடுவது ஏன்? | மீண்டும் ஷாருக்கானுடன் இணையும் அட்லி: 'டான் 3'ஐ இயக்குகிறாரா? | ரவி மோகனின் நிழலாக இருக்கும் கெனிஷா |

ஏவிஎம் தயாரிப்பில் ஏராளமான படங்களில் நடித்தவர் ரஜினி. ஆனால் அவர் நடிக்க மறுத்த படம் 'போக்கிரி ராஜா'. தெலுங்கில் அப்போது வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற 'சுட்டுலனுரு ஜகர்தா' என்ற படத்தின் ரீமேக் உரிமத்தை பெற்றிருந்த ஏவிஎம் சரவணன், அதனை ரஜினியை நடிக்க வைத்து தயாரிக்க விரும்பினார். இது தொடர்பாக அவர் ரஜினியை தொடர்பு கொண்டு பேசிய சரவணன் அந்த படத்தில் நடிக்க அழைத்தார். ஆனால் தெலுங்கு படத்தை பார்த்த ரஜினி இந்த படம் தனக்கு செட் ஆகாது. படத்தின் கதையில் தனக்கு பெரிய ஈர்ப்பு இல்லை என்று கூறிவிட்டார்.
உடனே ஏவிஎம் சரவணன் விசுவை அழைத்து இந்த படத்தின் கதையை ரஜினிக்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொடுங்கள் என்றார். உடனே விசுவும் தெலுங்கு கதையில் பல மாற்றங்களை செய்தார். குறிப்பாக ராதிகா நடித்த கேரக்டர் தெலுங்கு படத்தில் ரொம்பவே சிறியது. அதை பெரிய கேரக்டராக மாற்றி இரண்டு ஹீரோயின்கள் கதையாக மாற்றினார். நறுக்கான வசனங்களை எழுதினார். பின்னர் மாற்றப்பட்ட கதையை ரஜினியிடம் கொடுத்தபோது உடனே நடிக்க ஒப்புக் கொண்டார்.
இந்த படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். ரஜினியுடன் ஸ்ரீதேவி, ராதிகா நடித்தனர். பாபு ஒளிப்பதிவு செய்தார். எம்.எஸ்.விஸ்நாதன் இசை அமைத்தார். இந்த படத்தில் முத்துராமன் வில்லனாக நடித்தார். அவர் நடித்த கடைசி படமும் இதுதான். இந்த படத்தில் நடித்து முடித்து விட்டு ஊட்டியில் ஓய்வுக்காக சென்ற இடத்தில்தான் முத்துராமன் மறைந்தார். படத்தில் இன்னொருவர் அவர் குரலில் டப்பிங் பேசினார்.




