இத்தனை வயதிலும் பிகினியில் அசத்தும் ஸ்ரேயா | நான் உயிர் உள்ள மனுஷி - சாய் பல்லவி | மீண்டும் புத்துயிர் பெறும் 'சங்கமித்ரா' | சினிமாவில் வெற்றி தான் முக்கியம் : மணிகண்டன் | நீக் படத்திற்கு எஸ்.ஜே.சூர்யா விமர்சனம் : தனுஷ் நன்றி | முதல் 3 நாட்களில் 12 கோடி வசூலித்த கங்கனாவின் 'எமர்ஜென்சி' | 2025ல் ராஷ்மிகாவின் முதல் படம் பிப்ரவரி 14ல் வெளியாகிறது! | பிரேமலு 2ம் பாகம் அப்டேட் | காதலியை மணந்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து | கவுதம் மேனன் இயக்கத்தில் ரவி மோகன் |
கடந்த ஆண்டு மலையாளத்தில் கிரிஷ் ஏடி இயக்கத்தில் நஸ்லன், மமிதா பைஜூ முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வெளிவந்த படம் 'பிரேமலு' . இப்படம் மலையாளத்தில் வெற்றி பெற்றதை விட தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் மாபெரும் வெற்றி பெற்றது. இதன் வெற்றியைத் தொடர்ந்து பிரேமலு 2ம் பாகத்தை கடந்த ஆண்டில் அறிவித்தனர். ஆனால், அதன்பிறகு பல மாதங்கள் கடந்தும் எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் பிரேமலு படத்தினை தயாரித்த பாவானா ஸ்டுடியோஸ் நிறுவனர் சமீபத்தில் அளித்த பேட்டியின் மூலம் அவர் கூறியதாவது," பிரேமலு 2ம் பாகத்திற்கான படப்பிடிப்பை இவ்வருட ஜூன் மாதத்தில் துவங்கி டிசம்பர் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் . தற்போது இதற்கான லொக்கேஷன் மற்றும் நடிகர், நடிகை தேர்வு பணி நடைபெற்று வருகிறது" என கூறினார்.