டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

பாலா இயக்கத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடிப்பில் இந்த பொங்லுக்கு வெளியாகி உள்ள படம் ‛வணங்கான்'. இப்படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்து இருந்தார். இந்த படத்திற்கு கிடைத்த பாராட்டு, வரவேற்புக்காக பாலாவுக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அருண் விஜய்.
அவர் வெளியிட்ட பதிவில், ‛‛என் இயக்குனர் பாலாவிற்கு நன்றி. வணங்கான் படத்தில் கோட்டியாக வாழ அனுமதித்ததற்காக நன்றி. இதுமாதிரி வேடம் என் வாழ்வில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக் கூடியது. நான் என்ன செய்வேன் என எனக்கு உணர்த்தினீர்கள். இதற்காக எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன், என் மனமார்ந்த நன்றி'' என குறிப்பிட்டுள்ளார்.