ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
துபாயில் நடைபெற்ற '24H' கார் ரேஸில் ஒரு பிரிவில் நடிகர் அஜித்தின் “அஜித்குமார் ரேஸிங்” அணி மூன்றாவது இடத்தை பெற்றது. இதையடுத்து அஜித்துக்கும் அவரது அணிக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது போர்ச்சுக்கலில் நடக்கவுள்ள மற்றொரு ரேஸ் போட்டியில் அஜித் தனது அணியினருடன் பங்கேற்க சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே துபாய் கார் ரேஸ் நிறைவுக்கு பிறகு யூடியூப் சேனல் ஒன்றிற்கு அஜித் அளித்த பேட்டி, தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறுகையில், ''சென்னையில் இரவு நேர கார் பந்தயத்தை முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி நடத்தியது வரவேற்கத்தக்கது. நமது நாட்டில் கார் பந்தயங்களுக்கு அது மிகவும் உந்துசக்தியாக அமைந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் எனக்கு அளித்த ஆதரவுக்கும் நன்றி'' எனக் கூறினார்.