இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
சுந்தர். சி இயக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டில் விஷால், வரலட்சுமி, சந்தானம், நிதின் சத்யா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் 'மதகஜராஜா'. விஜய் ஆண்டனி இசையமைத்த இந்த படம் கடந்த 12 ஆண்டுகளாக திரைக்கு வராமல் கிடப்பில் கிடந்த நிலையில் வருகிற 12ம் தேதி பொங்கலுக்கு இப்படத்தை வெளியிடுகிறார்கள். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷால், மைக்கை பிடித்து பேசியபோது அவரது கைகள் நடுங்கியது. விஷாலின் தோற்றமும் பெரிய அளவில் மாறி போயிருந்தது. அதையடுத்து விஷாலுக்கு ஏற்பட்டுள்ள வைரஸ் காய்ச்சல்தான் இதற்கு காரணம் என்று மருத்துவ சான்றிதழையும் வெளியிட்டார்கள்.
என்றாலும் தற்போது விஷாலின் இந்த நிலைக்கு காரணம் அதிகப்படியான குடிப்பழக்கம்தான் என பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இப்படியான நிலையில், விஷாலின் மேனேஜர் ஹரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தியில், தற்போது விஷால் வைரஸ் காய்ச்சல் காரணமாக உடல் வலி மற்றும் சோர்வில் இருக்கிறார். மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் இருந்துபடி ஓய்வு எடுத்து வருகிறார். இந்த நேரத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வெளியாகி வருகிறது. அது முற்றிலும் வதந்தி என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.