சந்தானத்தின் ‛லவ் பைட்' | ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போகும் துல்கர் படம் | பிளாஷ்பேக் : போலீஸாக சில்க் ஸ்மிதா | பிளாஷ்பேக் : ஒற்றைக்காலில் நடித்தே உயிர் விட்டவர் | பாடல் சர்ச்சை : மகளிர் ஆணையம் முன்பு ஆஜராகி மன்னிப்பு கேட்ட நோரா பதேகி | சல்மான்கான் - நயன்தாரா படத்தின் டைட்டில் இதுதானா ? | கொல்லப்பட்ட விலங்கு நல ஆர்வலர் : கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட பார்வதி | திரிஷ்யம் 3 படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியானது | மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் : விஜய்க்கு ஆதரவாக திரையுலகினர் குரல் | 50வது நாளில் 'யூத்' |

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்தாண்டு தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் ' அமரன்'. சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்தனர். வீரமரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை தழுவி இப்படம் வெளிவந்தது. இப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நடிகர் தனுஷின் 55வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதனை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் பிரபல தயாரிப்பு நிறுவனமான டி சீரியஸ் நிறுவனத்தின் பூஷன் குமார் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி பான் இந்தியா படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிறுவனம் ஹிந்தியில் அட்ராங்கி ரே, அனிமல், கபீர் சிங், ஆதிபுருஷ் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.