குஷி கபூரிடம் ஸ்ரீ தேவியை பார்த்தேன் : அமீர்கான் | அஜித் பிறந்தநாளில் வெளியாகும் சூர்யாவின் ரெட்ரோ | நான் சினிமாவில் இருப்பது சிலருக்கு பிடிக்கவில்லை : சிவகார்த்திகேயன் | பாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்த்த அமரன் பட இயக்குனர் | நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா? -மேலாளர் விளக்கம் | யஷ் பிறந்தநாளில் வெளியான 'டாக்ஸிக்' டீசர் | சூர்யா 45வது படத்தின் டைட்டில் பேட்டைக்காரன்? | ஜனவரி 30ல் திரைக்கு வரும் அஜித்தின் விடாமுயற்சி? | விஜய் 69வது படத்தில் மமிதா பைஜூவுக்கு ஜோடியாகும் அசுரன் நடிகர்! | நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் தொடர்ந்த வழக்கு: ஜன.,22க்கு இறுதிவிசாரணை ஒத்திவைப்பு |
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழில் சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத முன்னனி நடிகராக வலம் வருகிறார். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ், சுதா கொங்கரா போன்ற முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார் . இவர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், " சினிமா துறையில் என்னை போன்ற சாதாரண மனிதர்கள் வருவதை சிலர் மட்டுமே வரவேற்கின்றனர். சிலருக்கு அதை ஏற்றுக்கொள்ள மனம் இல்லை. இந்த துறைக்கு வருவதற்கு அவர் யார் என்று கேட்டனர். இன்னும் சிலர் என் முகத்துக்கு நேராகவே இந்த துறையில் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டனர். அவர்களுக்கு நான் எந்த பதிலும் சொல்வதில்லை. சிரித்துக் கொண்டே கடந்துவிடுகிறேன். என்னுடைய வெற்றியின் மூலம் அவர்களுக்கு நான் பதில் தர விரும்பவில்லை. ஏனெனில், என் வெற்றி அவர்களுக்கானது அல்ல. என் வெற்றி என்னுடன் சேர்ந்து 100 சதவீத உழைப்பை போடும் என்னுடைய குழுவினருக்கானது. வெற்றியோ தோல்வியோ என்னை கொண்டாடும் என் ரசிகர்களுக்கானது.
உங்களை போல நாங்களும் வர வேண்டும் அண்ணா என்று சொல்லும் மக்களுக்கானது. கடந்து செல்வது மட்டுமே அவர்களை கையாள்வதற்கான ஒரே வழி. இன்னும் சிலர் சமூக வலைதளங்களில் என் படம் தோல்வியடைந்தால் அதற்கு காரணம் நான் தான் என்று கூறி என்னை தாக்குவார்கள். ஆனால், என் படம் வெற்றி அடைந்தால் என்னை தவிர மற்ற எல்லாரையும் பாராட்டுவார்கள்” என சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.