அனுஷ்காவின் ‛காட்டி' படம் மீண்டும் தள்ளிப் போகிறதா? | சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையா...? : இவானா அளித்த பதில் | திருவண்ணாமலையில் கண்ணீருடன் தரிசனம் செய்த அம்பிகா | சூர்யா சேதுபதி : தமிழ் சினிமாவில் அடுத்த வாரிசு நடிகர், வரவேற்பு பெறுவாரா ? | அல்லு அர்ஜுன் - பிரசாந்த் நீல் கூட்டணியில் 'ராவணம்' | ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள அவரது 44 படம் 'ரெட்ரோ'. இதில் நாயகியாக பூஜா ஹெக்டேவும், முக்கிய வேடங்களில் ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், சுஜித் ஷங்கர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
காதல் கலந்த ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இத்திரைப்படம் வருகின்ற மே 1ம் தேதி அன்று உழைப்பாளர் தினத்தில் திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அன்றைய தினம் நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.