நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

'ஆர்ஆர்ஆர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராம்சரண் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் படம் 'கேம் சேஞ்ஜர்'. சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு நாளை (ஜனவரி 10ம் தேதி) இந்தப் படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படம் குறித்த புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் ராம்சரண். அதன் ஒரு பகுதியாக பிரபல நடிகர் பாலகிருஷ்ணா நடத்தும் டிவி ஷோவான அன்ஸ்டாப்பபிள் என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ராம்சரண். அப்போது அவரிடம் நீங்கள் இந்த படத்தில் நடித்திருக்க வேண்டாமே என்று எந்த படத்திலாவது நடித்ததற்காவது வருத்தப்படுகிறீர்களா என்று பாலகிருஷ்ணா கேட்டபோது அதற்கு சற்றும் தயங்காமல் ''ஜஞ்சீர் படத்தில் நடித்ததற்கு வருத்தப்படுகிறேன்'' என்று கூறினார் ராம்சரண்.
அப்படி ராம்சரண் கூறிய ஜஞ்சீர் திரைப்படம் கடந்த 2013ல் ஹிந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிப்படமாக உருவானது. ஹிந்தியில் 'ஜஞ்சீர்' என்றும் தெலுங்கில் 'தூபான்' என்கிற பெயரில் இது வெளியானது. பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடித்திருந்தார். ஹிந்தியில் ராம்சரண் நடித்த முதல் படமாக இது அமைந்தது. ஆனால் இந்த படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. அதற்கு முக்கிய காரணம் இந்த படம் 1973ல் அதாவது கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன்பு அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான ஜஞ்சீர் என்கிற படத்தை ரீமேக் செய்து உருவாக்கப்பட்டது.
அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் தான் ராம்சரண் நடித்திருந்தார். தற்போதைய காலத்திற்கும் அதேசமயம் ராம்சரணுக்கும் ஏற்ற கதையாக இல்லாததால் இந்த படம் தோல்வியை தழுவியது. அதனால் இந்த படத்திலும் அமிதாப்பச்சன் கதாபாத்திரத்திலும் நடித்திருக்க வேண்டாமே எனத் தான் வருத்தப்பட்டதாக கூறியுள்ளார் ராம்சரண்.