காதலர் தினத்தில் காஷ்மீரில் ஹோட்டல் திறக்கும் கங்கனா | உலக அளவில் முதலிடம் பிடித்த அல்லு அர்ஜுனின் புஷ்பா- 2! | டிஆர்பி-யில் சிரஞ்சீவி, பிரபாஸை பின்தள்ளிய சிவகார்த்திகேயன்! | தெலுங்கில் மந்தமான வசூலில் அஜித்தின் விடாமுயற்சி! | சிப்பாய் விக்ரம் இல்லாமல் அமரன் வெற்றி முழுமை பெறாது! - ராஜ்குமார் பெரியசாமி | இளையராஜா பயோபிக் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | ஜூலை மாதம் மீண்டும் வருகிறது டைனோசர் | உயர்ந்த சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பேன் : சஞ்சனா நடராஜன் | எனது உற்சாகத்திற்கு காரணம் கிரியா யோகா : ரஜினி | 'விடாமுயற்சி' படம் பார்த்த அனிருத்துக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் |
நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமண வீடியோக்கள் அடங்கிய ஆவணப் படத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளதில் வெளியிட்டார். ஆனால் இந்த ஆவணப்படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், தான் நடித்த நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை வைப்பதற்காக அப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் இடத்தில் தொடர்ந்து அனுமதி கேட்டு வந்தார் நயன்தாரா. ஆனால் அவர் இழுத்து அடித்து வரவே, இரண்டு ஆண்டுகள் காத்திருந்த அவர்கள், பின்னர் தங்களிடமிருந்த அந்த படத்தின் சில காட்சிகளை இணைத்து ஆவணப்படத்தை வெளியிட்டார்கள். இதனால் ஆத்திரமடைந்த நடிகர் தனுஷ், தனது அனுமதி பெறாமல் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில் தற்போது அதே ஆவணப்படத்தில் சந்திரமுகி படத்தின் சில காட்சிகளை பயன்படுத்தியதற்காகவும் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் நயன்தாராவுக்கும், ஓடிடி தளத்துக்கும் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது.
மறுப்பு
இதற்கு சந்திரமுகி பட தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நயன்தாராவுக்கு எதிராக நாங்கள் எந்தவித புகாரும் அளிக்கவில்லை, நோட்டீசும் அனுப்பவில்லை என்றும் அவர் காட்சிகளை பயன்படுத்த ஏற்கனவே அனுமதி வழங்கிவிட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.