'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமான ராஜீவ் மேனன், 'மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சர்வம் தாள மயம்' போன்ற படங்களையும் இயக்கினார். அதோடு சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் திரைக்கு வந்த 'விடுதலை-2' படத்தில் ஒரு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருந்தார். அப்படத்தை ஓராண்டுக்கு மேலாக எடுத்தார் வெற்றிமாறன். சமீபத்தில் தான் ரிலீஸ் ஆனது.
இந்நிலையில் தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், டிஜிட்டல் வந்த பிறகு சினிமாவில் திட்டமிடல் இல்லாமல் போய்விட்டதாக கூறியுள்ளார். குறிப்பாக, ''மணிரத்னம் போன்றவர்களின் படங்களில் பணியாற்றும் போது எப்போது எப்படிப்பட்ட காட்சியை படமாக்குவார் என்பது தெரியும். ஆனால் பலரும் எந்தவித திட்டமிடமும் இல்லாமல் படம் எடுப்பதால் எதுவுமே தெரிவதில்லை. டிஜிட்டல் தொழில்நுட்ப வந்து விட்டதால் என்ன வேண்டுமானாலும் எடுக்கலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. குறிப்பாக ஒரு படத்தை இரண்டு ஆண்டுகள் வரை எடுக்கும் இயக்குனர்கள், கேமராமேன்களை அந்த படங்கள் முடிவது வரைக்கும் தங்கள் கூடவே பயணிக்க சொல்கிறார்கள். கேமராமேன்களை ஒரு அடிமை போல் நினைக்கிறார்கள். இது சினிமாவுக்கு நல்லதல்ல.
ஜுராசிக் பார்க் என்ற படத்தை 78 நாட்கள் படமாக்க திட்டமிட்டு 72 நாட்களில் சூட்டிங் முடித்து விட்டார்கள். ஆனால் இங்கு திட்டமிடல் இல்லாததால் நாட்கள் இழுத்துக் கொண்டே போகிறது. இதனால் பாதிக்கப்படுவது தயாரிப்பாளர்கள்தான். தமிழ் சினிமாவில் போதுமான தயாரிப்பாளர்கள் இல்லாத நிலையில் பிரமாண்டமாக படம் எடுக்கிறோம் என்பதின் பெயரில், கூட்டம் கூட்டமாக ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளை நடிக்க வைக்கிறார்கள். இது நல்ல சினிமாவுக்கு அழகல்ல,'' என்று அந்த பேட்டியில் தனது ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜூவ் மேனன்.