உஸ்தாத் பகத்சிங் படத்தின் படப்பிடிப்பை முடித்த பவன் கல்யாண் | பிளாஷ்பேக்: 'விமர்சனப் போட்டி' என்று விளம்பரம் செய்து, விடை தெரியாமல் போன “உலகம்” திரைப்படம் | 'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு | ரஜினி நடிக்கும் கூலி படக்கதை என்ன? ஆகஸ்ட் 2ல் டிரைலரில் தெரியும்...! | குற்றம் கடிதல் 2 உருவாகிறது : கதைநாயகன் ஒரு நல்லாசிரியர் | ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் | பிளாஷ்பேக்: டைட்டிலில் பெயர் போட்டுக்கொள்ளாத தயாரிப்பாளர் | எம்ஜிஆர் - கருணாநிதி, நட்பு, மோதல் தழுவலில் 'காந்தா'? |
தென்னிந்திய சினிமாவின் முக்கியமான ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன். பல படங்களை இயக்கி உள்ளார். பல படங்களில் நடித்துள்ளார். தற்போது வெற்றி மாறன் இயக்கும் விடுதலை படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின் போது ராஜீவ் மேனன் யார், அவரை எனக்குத் தெரியாது என்று இளையராஜா குறிபிட்டார்.
விழாவில இளையராஜா பேசும்போது "எல்லாப் படத்தின் இசை வெளியீட்டு விழா போல இது நடக்கவில்லை. 'விடுதலை' படத்திற்காக வெற்றிமாறன் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். 'தெனந் தெனமும்' பாடலை சஞ்சய் சுப்ரமணியம் பாடினார். அதன் பிறகு இயக்குநர் என்னை பாட சொல்லிக் கேட்டார். அதன் பிறகு சஞ்சய் 'மனசுல' பாடல் பாடினார். அவர் பெரிய சங்கீத வித்துவான்.
ராஜீவ் மேனனை பார்த்ததும் நான் யார் எனக் கேட்டேன். எனக்கு அவரை தெரியாது. பிறகு அவர் ஒளிப்பதிவாளர் என்பதை தெரிந்து கொண்டேன். சிறப்பாக நடித்திருக்கிறார் அவர். சேத்தன் நடித்ததைப் பார்த்து நான் பாராட்டினேன். முதல் பாகம் மாதிரி இரண்டாம் பாகத்தை நினைத்து விடாதீர்கள். இதில் வேற மாதிரி வெற்றி மாறன் பயணம் செய்திருக்கிறார். இந்தப் படத்திற்கு இசை அமைப்பது ஆகாயத்தில் புள்ளி வைப்பது மாதிரி. வெற்றி மாறன் சொல்லுவதையெல்லாம் கேட்டு அப்படியே இசையாக மாற்றினேன்.
நான் இசையமைக்கும்போது வெற்றி மாறன் ரெக்கார்டு செய்து கொண்டே இருப்பார். இவ்வளவு நேரம் நான் ஒரு நிகழ்வில் இருந்தது இல்லை. நிகழ்வுக்கு போவதும் இல்லை. இந்த நிகழ்வில் முன்பே பேசிவிட சொன்னார்கள். நான் இருக்கேன்னு சொன்னேன். எல்லோர் பேசுவதையும் கேட்கும் ஒரு நல்ல வாய்ப்பு எனக்குக் கிடைத்தது" என்றார்.
ராஜீவ் மேனன் இயக்கிய எல்லா படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்தார். அவர் ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிர ரசிகர். இதனாலேயே அவரை யார் என்று தெரியாது என்று இளையராஜா குறிபிட்டதாக கூறப்படுகிறது.