நேசிப்பாயா'-வை எதிர்பார்த்து காத்திருந்த அதிதி ஷங்கர் | சூர்யாவிற்கு வில்லனாக ஆர்.ஜே.பாலாஜி | நோட்டீஸ் அனுப்பிய காவல்துறை : அல்லு அர்ஜுன் எடுத்த முடிவு | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஜான்வி கபூர் | ஹிந்தியில் 800 கோடி கிளப்பை ஆரம்பித்து வைத்த 'புஷ்பா 2' | என் சினிமா வாழ்க்கையில் இதுவே முதல் முறை - மீனாட்சி சவுத்ரி | தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்ட மனிதர் அஜித் - நடன இயக்குனர் கல்யாண் | யுவன் சங்கர் ராஜாவை புகழும் சிவகார்த்திகேயன் | மீண்டும் வீர தீர சூரன் படத்திற்கு சிக்கலாக நிற்கும் விடாமுயற்சி | பொங்கல் வெளியீட்டில் பின் வாங்கிய படங்கள் |
இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்தபோது தமிழ்நாட்டு மக்கள் மிகவும் பயந்திருந்தார்கள். குறிப்பாக சென்னை மக்கள் அச்சத்தில் இருந்தனர். மக்கள் எந்த உற்சாகமும், மகிழ்ச்சியும் இல்லாமல் உயிர் பயத்தோடு வாழ்ந்தார்கள். இந்த நேரத்தில் மக்களை சகஜ நிலைக்கு கொண்டு வரவும், அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியை கொண்டு வரவும் ஏவி.மெய்யப்ப செட்டியார் ஒரு காமெடி படம் இயக்க விரும்பினார். செட்டியார் அப்போது பிரகதி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்திருந்தார் பின்னாளில்தான் அது ஏவிஎம் என்று மாறியது.
பிரகதி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் அவர் தயாரித்த படம்தான் 'சபாபதி'. 'ஹேன்டி ஆன்டி' என்ற ஆங்கில காமெடி படத்தை தழுவி பம்மல் சம்பந்த முதலியார் 'சபாபதி' என்ற பெயரில் நாடகமாக நடத்தி வந்தார். பின்னர் அதே பெயரில் படமாக தயாரானது. டி.ஆர்.ராமச்சந்திரன், காளி என்.ரத்னம், கே.சாரங்கபாணி, பத்மா, சி.டி.ராஜகாந்தம் உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
படத்தின் நாயகன் டி.ஆர்.ராமச்சந்திரன், ஏவிஎம் நிறுவனத்தில் மாத சம்பளத்திற்கு பணியாற்றி வந்தார். இந்த படத்தில் நடிக்க அவருக்கு ஒரு நாளைக்கு 30 ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டது. நடித்தவர்கள் பெரும்பாலும் மாத சம்பளத்துக்காரர்கள் என்பதால் அவர்களுக்கு தனி சம்பளம் எதுவும் இல்லை. மெய்யப்ப செட்டியார் நடத்தி வந்த சரஸ்வதி ஸ்டோர் ஆர்கெஸ்ட்ராவே படத்திற்கு இசை அமைத்தது.
பெரும்பணக்கார வீட்டு இளைஞரான டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு படிப்பு ஏறவில்லை. இதனால் அவரது தந்தை அவருக்கு அதிகம் படித்த திறமையான பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார். மனைவி அவரை புத்திசாலியாக்கும் முயற்சியே படத்தின் கதை. படம் வெளியான பிறகு மக்கள் கூட்டம் கூட்டமாக படத்திற்கு சென்றார்கள். போர் கால கவலைகளை மறந்து சிரித்தார்கள். இந்த மாதிரி நேரத்தில் காமெடி படம் வெளியிடுவதா என்ற விமர்சனத்தையும் படம் சந்தித்தது.