முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி | மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் | அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பஹத் பாசில் | நடிகை Vs இயக்குனர் : வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோ | இதுதான் வெற்றியா... : கேள்வி கேட்ட ரஜினி மகள் | புற்றுநோய் பாதிப்பு பற்றி மனம் திறந்த மம்தா மோகன்தாஸ் | 'தலைவர் தம்பி தலைமையில் முதல் பிரிடேட்டர்' வரை; இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பாடகர் ஆன புகழ் : பிளாஷ்பேக் சொல்லி பீலிங் | இனியா நடித்த கவர்ச்சி படம் | 'சர்வம் மாயா' பட இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டிய ராதிகா |

சந்தானம் நடிப்பில் காமெடி-குடும்ப சென்டிமென்ட் கலந்து உருவாகியுள்ள படம் சபாபதி. இந்த படத்தை ஆர் கே என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.ரமேஷ் குமார் தயாரிக்க, ஆர் ஸ்ரீநிவாச ராவ் இயக்கியுள்ளார்.
சந்தானத்துடன் பிரீத்தி வர்மா, எம் எஸ் பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, லொள்ளு சபா சுவாமிநாதன், காமெடி பஜார் மாறன் உள்பட பலர் நடித்துள்ளனர். பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்துள்ளார், சாம் சி.எஸ்.இசை அமைத்துள்ளார். திக்கு வாயால் அவதிப்படும் வாலிபர் கதாபாத்திரத்தில் முதல் முறையாக இப்படத்தில் சந்தானம் நடித்துள்ளார். நகைச்சுவை நிறைந்த இந்த திரைப்படத்தில் தந்தை - மகனுக்கு இடையேயான உறவு குறித்தும் பேசப்படுகிறது.
அடுத்த மாதம் (நவம்பர்) தியேட்டர்களில் வெளியாகிறது. அதன்பிறகான தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை கலர்ஸ் தமிழ் டி.வி கணிசமான தொகைக்கு வாங்கி இருக்கிறது. தீபாவளிக்கு ஒளிபரப்பாகலாம் என்று தெரிகிறது.