பாலா நடித்த காந்திகண்ணாடி படம்: ம.கா.பா ஆனந்த், பிரியங்கா சொன்னது என்ன? | 50 ஆண்டு கொத்தடிமை,, தஞ்சை பின்னணியில் நடக்கும் கதை | மதராஸியை நம்பியிருக்கும் முருகதாஸ் | நடிப்பில் ஆர்வம் காண்பிக்கும் மிஷ்கின் | குருநாதர் பாக்யராஜ் சொன்ன அட்வைஸ்: சிஷ்யன் பாண்டியராஜன் நெகிழ்ச்சி | பிளாஷ்பேக்: ஜேம்ஸ்பாண்ட் நடிகராக ஜெய்சங்கர் ஜெயித்துக் காட்டிய “வல்லவன் ஒருவன்” | நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! |
அறிமுக இயக்குனர் சுந்தர் கிரிஷ் இயக்கி இருக்கும் படம் அனுக்கிரகன். இப்படத்தை சக்தி சினி புரொடக்சன்ஸ் சார்பில் டாக்டர்.முருகானந்தம் மற்றும் சண்முகப்பிரியா தயாரித்திருக்கிறார்கள். வினோத் காந்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ரெகான் இசை அமைத்துள்ளார். ஸ்ருதி ராமகிருஷ்ணனுடன் புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள்.
இயக்குனர் சுந்தர் கிரிஷ் கூறியதாவது: அனுக்கிரகன் என்றால் அருள் அல்லது ஆசீர்வாதம் எனப் பொருள் உண்டு. இறைவனின் ஆசீர்வாதமாகவே மாறிய ஒரு மகனைப் பற்றிய கதைதான் அனுக்கிரகன். படத்தில் கதாநாயகன், நாயகி போன்ற வழக்கமான பார்முலா இருக்காது. கதைக்கேற்ற நாயகர்களாக இருப்பார்கள் .
அப்படித்தான் முரளி ராதாகிருஷ்ணன் நடித்துள்ளார். இவர் ஜீ தமிழ் தொடர்கள் வழியே புகழ்பெற்றவர். அஜய் கிருஷ்ணா இன்னொரு பிரதான வேடத்தில் நடித்திருக்கிறார். நாடோடிகள் படம் முதல் ஒரு திருப்புமுனையான வாய்ப்புக்காக காத்திருப்பவர் இவர். நடிகை ஸ்ருதி ராமகிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் சில கன்னட ,தமிழ்ப் படங்களில் நடித்துள்ளவர்.
இன்னொரு முகம் தீபா. தமிழ் தெலுங்கில் நடித்திருக்கும் இளம் நடிகை இவர். றெக்க படத்தில் "கண்ணம்மா கண்ணம்மா..." பாடலில் வருபவரும் மாரி படத்தில் தனுஷின் மகனாக நடித்தவருமான ராகவனும் இதில் நடித்துள்ளார். என்றார்.