ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
ரமணா கம்யூனிகேஷன்ஸ் என்ற படநிறுவனம் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை காமராஜ் என்ற பெயரில் படமாக தயாரித்து 2004 ஆம் ஆண்டு வெளியிட்டார் இயக்குனர் பாலகிருஷ்ணன். அந்த திரைப்படத்திற்கு தமிழக அரசின் சிறந்த படத்திற்கான விருது கிடைத்தது. தற்போது இதன் இரண்டாம் பாகம் பெருந்தலைவர் காமராஜ் - 2 என்ற பெயரில் தயாராகிறது.
காமராஜ் திரைப்படத்தை தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் பட நிறுவனமே இந்த படத்தையும் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பை காமராஜர் வாழ்ந்த நினைவு இல்லத்தில் ஜி.கே.வாசன் துவங்கி வைத்தார். காமராஜர் வேடத்தில் பிரதீப் மதுரம் நடிக்கிறார். மற்றும் தீனா தயாளன், ஆர். வெங்கட்ராமன் ஆகியோர் நடிக்கிறார்கள். எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்கிறார். முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க பிரபல நடிகை, நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் இயக்குனருமான பாலகிருஷ்ணன்.