தமிழுக்கு வருகிறார் ஜான்வி கபூர் | புதிய பிராண்ட் கார் வாங்கிய சீரியல் நடிகை வைஷாலி தனிகா! | ரஜினிக்கு எழுதிய கதையை சூர்யாவுக்காக திருத்தம் செய்த கார்த்திக் சுப்பராஜ்! | சிவகார்த்திகேயன் - ஸ்ருதிஹாசனை இயக்கும் லோகேஷ் கனகராஜ்! | வேட்டையனை தொடர்ந்து ஜெயிலர் -2விலும் ரஜினியுடன் இணைந்த பஹத் பாசில்! | காஷ்மீர் தாக்குதல்: உயிர் தப்பிய பாலிவுட் நடிகை | சொட்டைத் தலையர்களின் கதை 'சொட்ட சொட்ட நனையுது' | பெரிய பட்ஜெட்டில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்': சந்தானம் தகவல் | நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் |
ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா, அஞ்சலி மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் 'கேம் சேஞ்சர்'. இப்படம் அடுத்த வாரம் ஜனவரி 10ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. நேற்று இப்படத்தின் டிரைலர் யு டியுப் தளத்தில் வெளியானது. டிரைலருக்கு தெலுங்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பைப் கொடுத்து வருகின்றனர்.
தெலுங்கில் 24 மணி நேரத்திற்குள் அதிக பார்வைகளைப் பெற்ற டிரைலராக 'புஷ்பா 2', 44 மில்லியன் பார்வைகளுடன் முதலிடத்தில் உள்ளது. 'குண்டூர் காரம்' டிரைலர் 37 மில்லியன் பார்வைகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது 'கேம் சேஞ்சர்' டிரைலர் 34 மில்லியன் பார்வைகளைக் கடந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த டிரைலர் வெளியாகி 24 மணி நேரம் முடிய இன்னும் சில மணி நேரங்கள் உள்ளது. அதற்குள் மேலும் பார்வைகளைப் பெற்று முன்னேறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
'கேம் சேஞ்சர்' ஹிந்தி டிரைலர் 13 மில்லியன் பார்வைகளையும், தமிழ் டிரைலர் 11 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது.