வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவான தெலுங்குப் படமான 'புஷ்பா 2', பான் இந்தியா படமாக கடந்த மாதம் டிசம்பர் 5ம் தேதி வெளியானது. படம் வெளியாகி தற்போது நான்கு வாரங்கள் முடிவடைந்துள்ளது.
இந்த நான்கு வாரங்களில் உலகம் முழுவதும் 1799 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மொத்த வசூலை மட்டுமே தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது. மொழி வாரியாக, மாநிலங்கள் வாரியாக அவர்கள் வெளியிடுவதில்லை. இருந்தாலும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் விசாரித்தவரையில் கிடைத்த வசூல் தகவல்கள் இதோ..
ஹிந்தியில் மட்டும் இப்படம் 900 கோடி வசூலையும், தெலுங்கில் 350 கோடி வசூலையும், தமிழகத்தில் 75 கோடி வசூலையும், கர்நாடகாவில் 95 கோடி வசூலையும், கேரளாவில் 15 கோடி வசூலையும், வெளிநாடுகளில் 364 கோடி வசூலையும் பெற்றுள்ளதாகச் சொல்கிறார்கள்.
இதுவரை தெலுங்குத் திரைப்படங்களில் 'பாகுபலி 2' படம் ஆந்திரா, தெலங்கானாவில் 415 கோடி வசூலை அள்ளியது. ஆனால், 'புஷ்பா 2' படம் அந்த சாதனையை முறியடிக்காமல் 350 கோடி வசூலை பெற்றுள்ளது.