பவதாரிணிக்கு இசை அஞ்சலி செலுத்திய ஷாலினி | அருள்நிதிக்கு ஜோடியாகும் தன்யா ரவிச்சந்திரன்! | தரைமட்டமானது சென்னை அடையாளங்களில் ஒன்றான உதயம் தியேட்டர் | வலைதளங்களில் வைரலான அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ | பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சிரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா |
மலையாளத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு இயக்குனர் ஜீத்து ஜோசப் டைரக்சனின் மோகன்லால் மீனா நடிப்பில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து சில வருடங்கள் கழித்து அதன் இரண்டாம் பாகமும் வெளியாகி முதல் பாகத்திற்கு குறைவில்லாத சமமான வெற்றியை பெற்றது. இந்த படத்தில் ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பத்து தலைவராக மோகன்லாலும் அவரது மனைவியாக நடிகை மீனாவும் நடித்திருந்தனர். இந்த படம் மீனாவுக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததுடன் அவரது புதிய இன்னிங்ஸையும் வெற்றிகரமாக துவக்கி வைத்தது.
ஆனால் முதலில் இந்த கதாபாத்திரம் என்னைத்தான் தேடி வந்தது, ஆனால் என்னால் நடிக்க முடியாமல் போனது என்று தற்போது வருத்தத்துடன் ஒரு புதிய தகவலை கூறியுள்ளார் நடிகை ஷோபனா. எண்பது 90களில் மோகன்லாலுடன் இணைந்து பல படங்களில் ஜோடியாக நடித்தவர் தான் ஷோபனா. திரிஷ்யம் பட வாய்ப்பு வந்தபோது அவர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டிருந்தார். ஆனாலும் அந்த நேரத்தில் வினீத் சீனிவாசன் இயக்கத்தில் திர என்கிற படத்தில் நான் நடித்து வந்தேன். அதன் காரணமாக திரிஷ்யம் படத்திற்கு என்னால் தேதிகள் ஒதுக்க முடியவில்லை. அப்படி ஒதுக்க முடியாது என்பது தெரிந்ததால் திரிஷ்யம் படத்தின் ஸ்கிரிப்ட்டை கூட நான் படிக்கவில்லை என்று கூறியுள்ளார் ஷோபனா.